இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விம்பிள்டன் கிராம்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் வரும் செப்டம்பர் வரை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து லண்டனில் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெற இருந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.