கொரோனா காரணமாக பிரஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டி 3 மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 24யில் தொடங்கி ஜுன் 7ம் தேதி வரை இத்தொடர் முதலில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தங்களால் போட்டிக்கான ஏற்பாடுகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதன் காரணமாக தங்களால் நிர்ணியிக்கப்பட்ட தேதியில் போட்டிகளை நடத்த முடியவில்லை என்றும் பிரஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.