ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், பர்மிங்காமில் நடைபெற்றுவருகிறது.இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில், கொரியாவின் ஜி ஹியுன் சுங்குடன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் அசத்தலாக விளையாடிய சிந்து, 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.