வீரர்கள் களமிறங்குவதற்கு பதிலாக, மைதானத்தில் மழை குறுக்கிட்டதால், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ரத்து செய்யப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில், இந்த போட்டி, பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குவதாக இருந்தது. கொரானா பீதி நிலவிய போதிலும் போட்டியை காண, ரசிகர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். ரசிகர்களிடம் கொரானா மருத்துவ பரிசோதனை நடத்திய மருத்துவக்குழுவினர், தீவிர ஆய்வுக்கு பின்னரே, அனைவரையும் மைதானத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும், முக கவசம் அணிந்திருந்தனர். மழையால், முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இரு அணிகளுக்கு இடையேயான 2- வது ஒரு நாள் போட்டி, வருகிற 15 ம் தேதி லக்னோவிலும், 3ஆவது இறுதி ஒரு நாள் போட்டி, 18ஆம் தேதி, கொல்கத்தாவிலும் நடைபெறும்.