கொரானா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு, முதல் முறையாக பார்வையாளர்களின்றி நடைபெற்றது.
2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கான ஜோதி ஏற்றும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்றது.
ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற கீரீஸ் வீராங்கனை அன்னா கோராகாக்கிமுதல் நபராக ஒலிம்பிக் ஜோதியை கையிலேந்தினார். இதன் மூலம் முதலாவதாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.