ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு (The PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கொரானா வைரஸுக்கு மருந்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஆதலால் கொரானா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, ஐபிஎல் போட்டிகளை நடத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.