மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கு சாத்தியமில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரானா காரணமாக பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகின.
வீரர்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், டி.வி மற்றும் செயலிகள் மூலம் ரசிகர்கள் போட்டிகளை நேரலையில் காணலாம் என்றும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தகவலை பிசிசிஐ சேர்ந்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி போட்டியை சுட்டிக்காட்டிய அவர், அப்போட்டியை காண 60 ஆயிரம் பேர் வந்திருந்ததாகவும், அங்கு அசம்பாவிதம் ஏற்படாத நிலையில், ஐபிஎல் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கபோகிறோம் என தெரிவித்தார்.