இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள், கொரானா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய வீரர்களுடன் கைகுலுக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வருகிற 12ஆம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர், கொரானா அச்சுறுத்தலால் வீரர்களின் பாதுகாப்பில் அதிக கவனத்துடன் தாங்கள் செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இத்தொடரின்போது, இந்திய வீரர்களிடம் கைகுலுக்குவதை தங்களது வீரர்கள் தவிர்க்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.