மும்பையில் இருந்து கோவைக்கு விமான பயணம் மேற்கொண்டபோது தமது கிரிக்கெட் பேட் காணாமல் போய் விட்டதாக இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், மும்பையில் இருந்து கோவைக்கு இன்டிகோ நிறுவன விமானத்தில் பயணம் மேற்கொண்டதாகவும், கோவையில் வந்திறங்கியதும் தமது உடைமைகளை பரிசோதித்ததில் பேட் ஒன்று காணாமல் போய் விட்டது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேட் என்ன ஆனது என்பது தெரியவில்லை என்றும், அந்த பேட்டை வைத்துதான் ஐபிஎல் போட்டியில் விளையாடியதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார். அதேநேரத்தில் பேட் திருடப்பட்டு இருக்கலாம் என தாம் கருதவில்லை என்றும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.