இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க முன்னணி பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுவரும் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, ஒரு மாதக் காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் 12ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ரபாடா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.