நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்களை எடுத்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
முதல்நாளான நேற்று விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்சில் 63 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து அணி,2ம் நாளான இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 235 ரன்களில் சுருண்டது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், பூம்ரா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இதன்பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள், ஆரம்பம் முதல் சீட்டு கட்டுகள் போல சரிந்தபடி இருந்தன. பிருத்வி சா 14, மயங்க் அகர்வால் 3, புஜாரா 24, கோலி 14, ரஹானே 9, உமேஷ் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. விஹாரியும், ரிசப் பந்தும் களத்தில் இருந்தனர்.