இந்தியா நியூசிலாந்து இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக மூத்த வீரர் இஷாந்த் ஷர்மா விளையாடுவதில் சந்தேகம் உருவாகி உள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இஷாந்த் ஷர்மா இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதில் சந்தேகம் உருவாகி உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் இந்நிலையில் இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக விளையாடாமல் போனால் அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிகின்றனர்.
சமீபத்தில் ரஞ்சி கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமாகி இந்திய அணிக்கு திரும்பிய இஷாந்த் மீண்டும் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.