உலக லெவன் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடும் ஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச நாட்டின் தந்தை எனப்படும் மறைந்த முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்த தினத்தையொட்டி மார்ச் 18, 21 ஆகிய தேதிகளில் ஆசியா லெவன் அணிக்கும், உலக லெவன் அணிக்கும் இடையே இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஆசிய லெவன் அணியில், இந்திய வீரர்கள் விராட் கோலி, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து 4 வங்கதேச வீரர்கள்,2 இலங்கை வீரர்கள்,2 ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஒரு நேபாள வீரர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.