நியூசிலாந்த் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் கே.எல். ராகுல் ஏன் சேர்க்கப்படவில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் சரிவர ரன்கள் குவிக்காததே காரணம் என்று கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கபில் தேவ் அளித்த பேட்டியில், 20 ஓவர் போட்டித் தொடர் நாயகனாக கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, அவரை டெஸ்ட் அணியில் ஏன் சேர்க்கவில்லை என கேள்வியெழுப்பினார்.
நல்ல பார்மில் உள்ள வீரருக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம் என்றும், அடிக்கடி அணியில் மாற்றம் செய்வது வீரர்கள் விளையாட்டு திறனை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.