ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தியது.
ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாபாலி வர்மா (Shafali Verma) 39 ரன்கள் சேர்த்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே எடுத்ததால், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.