மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சிட்னியில் நடைபெற்ற குருப் ஏ பிரிவு அணிகள் இடையேயான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீராங்கனை ஆலிசா ஹீலி (Alyssa Healy) 51 ரன்களும், ஆஸ்லிக் கார்ட்னர் (Ashleigh Gardner) 34 ரன்களும் சேர்த்தனர்.
7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.