கால்பந்து முன்னாள் ஜாம்பவான் பீலேவுக்கு, பிரேசில் கால்பந்து கூட்டமைப்பினர் சிலை திறந்துள்ளனர்.
பிரேசில் அணி கால்பந்தில் 3 ஆவது உலக கோப்பையை 1970ஆம் ஆண்டு வென்றது. இதன் 50ஆவது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக பீலேவுக்கு சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிலை திறப்பு நிகழ்வில், பீலேவுடன் ஏராளமான முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டனர்.