செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

இந்தியா - பாக்,. இடையே கிரிக்கெட் வேணாம்னா, இதுவும் வேணாம்.. அக்தர் காட்டம்

Feb 18, 2020 04:09:22 PM

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இதே கருத்தை வலியுறுத்தி தனது யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வீடியோவில் பேசியுள்ள ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர், இந்தியா - பாகிஸ்தான் இடையே பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. ஆனால் ஆசியாவின் இரு முக்கிய நாடுகளுக்கிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.இரு நாடுகளிடையே ஒரு சில விளையாட்டு போட்டிகள் தடையின்றி நடைபெறும் போது, இருதரப்பு கிரிக்கெட் தொடரை மட்டும் நடத்தாமல் புறக்கணித்து வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அக்தர், அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இணைந்து டேவிஸ் கோப்பை டென்னிஸ் விளையாடலாம், கபடி விளையாடலாம், ஆனால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்க கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. உறவுகளை குறைத்து கொள்ள நினைத்தால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை நிறுத்தி கொள்ள வேண்டியது தானே.

ஏன் கிரிக்கெட்டை குறி வைக்கிறீர்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலுமே கிரிக்கெட் அரசியலாக பார்க்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் நாட்டில் விருதோம்பல் எப்படி இருக்கும் என்பதை முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களிடம் கேளுங்கள். இரு நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கப்பட கூடாது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே வெங்காயம், தக்காளி மற்றும் பல வர்த்தகங்கள் தங்கு தடையின்றி நடக்கிறது. ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொள்கிறோம். ஆனால் இருதரப்பு கிரிக்கெட் மட்டும் விளையாட முடியவில்லை.

தற்போதய சூழலில் பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியும், இந்தியாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் வருவதற்கான சுமூக சூழல் இல்லை என்பது புரிகிறது. ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் போல வேறு ஒரு நடுநிலையான நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்தலாமே என்று யோசனை தெரிவித்துள்ளார் அக்தர்.


Advertisement
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகுப் போட்டியின் தகுதிச் சுற்று.. பிரிட்டன் மற்றும் இத்தாலி அணிகள் கடுமையாக மோதல்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பன்.. அரசு சார்பில் உற்சாக வரவேற்பு..
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement