பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி மற்றும் அவரது மனைவிக்கு 5ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
அப்ரிடிக்கு ஏற்கெனவே 4 மகள்கள் உள்ள நிலையில், அவரது மனைவி நாடியா 5ஆவதாக கர்ப்பம் தரித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, ஏற்கெனவே முதல் 4 மகள்களுக்கு ஏ ((A)) எழுத்தில் ஆரம்பிக்கும் வகையில் பெயர் வைத்தது போல இக்குழந்தைக்கும் பெயர் வைக்க விரும்புவதாகவும், ஆதலால் நல்ல பெயரை தெரிவிப்போருக்கு பரிசு வழங்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள், பல பெயர்களை அவருக்கு முன்மொழிந்து வருகின்றனர்.