நியூசிலாந்து அணியுடனான பயிற்சி போட்டி மூலம் இந்திய வேகபந்து வீச்சாளர்கள் இடையே நம்பிக்கை அதிகரித்திருப்பதாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்த் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் 21ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு இந்திய லெவன், நியூசிலாந்த் லெவன் அணிகளுக்கு இடையே பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.
2ம் நாளான நேற்று நியூசிலாந்த் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், பூம்ரா, உமேஸ் யாதவ், சைனிதலா தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இதை சுட்டிக்காட்டி பேட்டியளித்த ஷமி, வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், இது டெஸ்ட் தொடரில் அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.