நியூசிலாந்த் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் என்று புதுமுக வீரர் ஹனுமா விஹாரி (Hanuma Vihari) தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்த் இடையேயான டெஸ்ட் தொடர் 21ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடாததால், அவருக்கு பதில் தொடக்க வீரராக யாரை அணி களமிறக்குவது என்பது தெரியாமல் இந்திய அணி குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில், ஹாமில்டனில் செய்தியாளர்களிடம் பேசிய விஹாரி, எந்த வரிசையிலும் விளையாட தன்னை தயார்படுத்தி கொண்டிருப்பதாகவும், இருப்பினும் அணி கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் என்றும் தெரிவித்தார்.
26 வயதாகும் ஹனுமா விஹாரி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1 சதம், 3 அரை சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
watch more on : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg