நியூசிலாந்த் கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டர் ஜிம்மி நிசம் விடுத்த சவாலை ஏற்பதாக இந்திய அணி வீரர் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ட்விட்டரில் நீசம் வெளியிட்ட பதிவில், 2 பேர் தங்களது கைகளை அசைத்து விளையாடும் பேப்பர்ஸ், சிஸ்சர்ஸ், ராக் என்ற விநோத விளையாட்டுக்கு வரும்படி சவால் விடுத்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கே.எல். ராகுல் கேப்டனாகவும், அந்த அணி வீரராக ஜிம்மி நீசமும் விளையாடவுள்ளனர். இதை சுட்டிக்காட்டி நீசமின் சவாலை ஏற்பதாகவும், ஏப்ரல் மாதத்தில் சவால் நிறைவேற்றப்படும் என்றும் ட்விட்டரில் கே.எல். ராகுல் பதிவு வெளியிட்டுள்ளார்.