கடந்த 2017ம் ஆண்டு ஈக்வி பாக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஏராளமான அமெரிக்கர்களின் தகவல்களை சீனா திருடியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கூறும்போது, அமெரிக்காவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஈக்விபாக்ஸில் இருந்து சுமார் 145 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை சீன ராணுவ அதிகாரிகள் ஹேக்கிங் செய்து திருடியதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சீனாவைச் சேர்ந்த 4 ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளதாகக் கூறிய அவர், சீனாவின் இத்தகைய செயல் கடந்த 2015ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையை மீறிய செயல் என்று தெரிவித்தார். ஈக்விபாக்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களின் பெயர்கள், அவர்களின் மருத்துவ அறிக்கை, வங்கிக் கணக்கு எண், கையிருப்பு போன்றவற்றை சீனா திருடியதாகவும் அவர் கூறியுள்ளார்.