சீனாவின் வூகான் நகரில் புதிதாக படையெடுத்து உலகையை உலுக்கி வரும் கொரோனா புதிய வைரஸாக இருந்தாலும் இதன் பெயர் 2017 -ம் ஆண்டு வெளிவந்த ”ஆஸ்டரிக்ஸ்” காமிக் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயராகும்.
2017- ம் ஆண்டு வெளிவந்த ஆஸ்டரிக்ஸ் என்னும் ஃப்ரெஞ்ச் காமிக்ஸ் தொடரில் வரும் வில்லனின் பெயர் கொரோனா வைரஸ் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆஸ்ட்ரிக்ஸ் சீரிசின் 37- வது பதிப்பான ”ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் சேரியட் ரேஸ்” என்ற தொடரில் வரும் முகமுடி வில்லன் இத்தாலியில் ரோமானிய மக்களுக்கு எதிராக சேரியட் ரேசில் போராடுபவர்.
அதுமட்டுமல்லாது அவருடன் உதவியாளராக வரும் ”பேசிலஸ்” , வில்லன் உடன் சேர்ந்து ரோமானிய மக்களுக்கு எதிராக இறுதி வரை சண்டையிட்டு வருகிற கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தன. இத்தொடரின் இறுதியில் இரு கதாபாத்திரங்களும் சேரியட் ரேசில் தோல்வியை அடைவார்கள்.
இது குறித்து பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்க் வில்லன் கதாபாத்திரம் கொரோனோ வைரஸ் என்றும் , அவருக்கு உதவியாளராக வரும் கதாபாத்திரம் பேசிலஸ் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதில் பேசிலஸ் கதாபாத்திரத்தின் பெயர் லத்தீன் மொழியில் பாக்டீரியா என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து கிருமிகள் பெயர் கொண்ட இந்த இரு கற்பனை கதாபாத்திரங்களானது தொடரின் இறுதியில் தோல்வி அடையும். அது போலவே உலக நாடுகளை திணற வைத்து கொண்டிருக்கும் கொரோனாவும் தோற்றுபோக வேண்டும் என்று அவரது ட்விட்டுக்கு பலரும் பதில் ட்விட் செய்து வருகின்றனர்.