சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு 1000 யுவான் (இந்திய மதிப்பில் ரூபாய் பத்தாயிரம்) பரிசளிப்பதாக சீனா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு தினமும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இருந்தும் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் பரிசோதிக்க அச்சப்படும் மக்களின் பயத்தை போக்க, தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும் மக்களுக்கு 1000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் ரூபாய் பரிசளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த ஹூபே மாகாணத்தில் சீன அரசு முதலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் வந்து பரிசோதிப்பவர்களுக்கும் பரிசு தருவதாக சீனா நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது .