அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவில் அட்லாண்டிக் பெருங்கடலை 5 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானம் சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு நார்வேகியன் நிறுவன விமானம் நியூயார்க் முதல் லண்டன் வரையிலான தூரத்தை 5 மணி நேரம் 13 நிமிடங்களில் கடந்ததே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங்க் 747 ரக விமானம், அந்த தூரத்தை வெறும் 4 மணி நேரம் 56 நிமிடங்களில் கடந்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.
அதுமட்டுமின்றி அதிவேகமாக காற்று வீசிய நிலையில், மணிக்கு 800 மைல்கள் வேகத்தில் பறந்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. லண்டனில் அதிவேகமாக வீசி வரும் காற்றால், அங்கு பல விமானங்கள் தாமதமாகி வருவதோடு, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.