சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் ரோபோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 900க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
class="twitter-tweet">Promise of new technology!?
A service robot makes deliveries at a corona virus isolation point in Jiaxing, China ??.
pic.twitter.com/m18m1nGlyY
இதையடுத்து சிகிச்சைக்கு ரோபோக்களைப் பயன்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நோய் பரவும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.