ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதுடன் புதர்த் தீயால் பாதிக்கப்பட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது
கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவை வாட்டி வதைத்த கடும் வெயிலால் நியூசவூத் வேல்ஸ், குவின்ஸ்லாந்தின் உள்ளிட்ட மாநிலங்களில் புதர்த்தீ பற்றியது. 60க்கும் மேற்பட்ட இடங்களில் கொளுந்துவிட்டு எரிந்த புதர்த் தீயால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல கோடி ஏக்கரிலான காடுகளும் ஏராளமான வன உயிரினங்களும் அழிந்து போயின.
இதனால், புதர்த் தீயில் மூன்றில் ஒரு பங்கு அணைந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு வாரம் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.