அண்டார்டிகாவில் அதிகபட்ச வெப்ப நிலை கடந்த வியாழக்கிழமையன்று பதிவாகியது.
இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அண்டார்டிகாவின் எல்பெரன்சாவில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது.
முன்னர் 17 புள்ளி 5 டிகிரி செல்சியஸ்தான் குறைந்தபட்ச வெப்ப நிலையாக இருந்தது. பனி உருகுவதன் காரணமாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது. வெப்ப நிலை உயர்வதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.