சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் அதன் மெசஞ்சர் குறுந்தகவல் தளங்களை விஷமிகள் ஹேக் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின்னஞ்சல் ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள டுவிட்டர் செய்தித் தொடர்பாளர்,ஹேக் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்கி விட்டதாக கூறியுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சேர்ந்து அந்த கணக்குகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டில் டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சியின் (Jack Dorsey) டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து இனவெறி மற்றும் சாபம் கொடுக்கும் பொய்த் தகவல்கள் டுவிட்டரில் அவரை பின்பற்றும் 40 லட்சம் பேருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.