ஐரோப்பாவில் 7 ஆண்டுகளாக ஒரு அங்குலம் கூட நகராமல் சாலமண்டர் வகை பல்லி, ஒரே இடத்தை ஆட்கொண்டுள்ளது என்ற ஆய்வறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா((Bosnia and Herzegovina)) நாட்டில் உள்ள குகை ஒன்றில் ஓல்ம் என்று அழைக்கப்படும் ட்ராகன் போன்ற பல்லி, 2 ஆயிரத்து 569 நாட்கள் நகராமல் ஒரே இடத்தில் இருந்தது கண்டறியப்படுள்ளது. வெளிறிய தோல், வளர்ச்சியடையாத கண்களுடன் ஒரு அடி நீளம் கொண்ட இந்த ஊர்வன, 100 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை.
பல ஆண்டுகள் உணவின்றி ,இருட்டில் உயிர் வாழுவதற்கான தகவமைப்பு கொண்டது என்றும் தங்கள் இணையை கண்டுபிடிப்பதற்காக மட்டும் இருப்பிடத்தை விட்டு இவை வெளியேறுவதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.