ஏழு கண்டங்களில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் உலக மாரத்தான் போட்டி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் தொடங்கியது.
மோசமான தட்பவெப்பநிலை காரணமாக அண்டார்டிக்கில் இருந்து கேப் டவுனுக்கு மாற்றப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த 27 வீரர்களும் 15 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
7 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்தை முதலில் கடந்து ஆண்கள் பிரிவில் சீன வீரர் செங் ஹுவாங் மற்றும் பெண்கள் பிரிவில் டென்மார்க்கின் கிறிஸ்டினா மேட்சன் வெற்றிப் பெற்றனர்.
இதை தொடர்ந்து அண்டார்டிக், ஆஸ்திரேலியாவின் பெர்த், துபாய், மாட்ரிட் மற்றும் போர்டாலெஸாவில் (Fortaleza) நடக்கும் மாரத்தான் போட்டிகள் மியாமியில் நிறைவு பெறுகிறது.