அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவியேற்ற தரஞ்சித் சந்து அதிபர் டிரம்ப்பை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
பிப்ரவரி 24ம் தேதி டிரம்ப் இந்தியா வருவதாக கூறப்படும் நிலையில் வெள்ளை மாளிகை இன்னும் தேதியை உறுதி செய்யவில்லை.பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் சந்திக்கிற போது மேற்கொள்ளும் முக்கிய ஒப்பந்தங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு டிரம்ப் வரும்போது பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.