ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்த மழை பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கடற்கரை, நியூ இத்தாலி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், சில பகுதிகளில் எரிந்து வந்த தீயும் அணைந்துள்ளது. மேலும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த வறட்சி சூழ்நிலையினையும் சுமூகமாக்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிட்னியில் மட்டும் 60 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப் பொழிந்துள்ளது. திங்கட்கிழமை 360 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பொழியும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்கள் கழித்து இப்பகுதியில் புதர்த்தீ குறித்த எச்சரிக்கை வழங்கப்படவில்லை. கனன்று கொண்டிருக்கும் தீயின் அபாயமும் 42 ஆக குறைந்துள்ளது.