போர்னியோ தீவில் ஆற்றில் இடுப்பளவு சகதியில் நின்ற நபருக்கு, ஒராங்குட்டான் குரங்கு ஒன்று உதவிக்கரம் நீட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அழிந்து வரும் ஒராங்குட்டான்கள் குரங்குகளை பாதுகாப்பதற்காக இயங்கி வரும் நிறுவன ஊழியர் ஒருவர், அவை அதிகம் வசித்து வரும் பகுதியில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆற்றில் இடுப்பளவு சகதியில் சிக்கி நின்ற ஊழியருக்கு, அங்கு வந்த ஒராங்குட்டான் குரங்கு உதவுவதற்காக கைநீட்டியது.
இதனை அப்பகுதியில் நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த அனில் குமார் என்பவர் படம்பிடிக்க, உருக்கமான இந்த புகைப்படத்தை போர்னியோ ஒராங்குட்டான் பாதுகாப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.