அல்கொய்தா அமைப்பின் யேமன் பிரிவு தலைவர் குவாஸிம் அல் ராய்மி (Qassim al-Raymi) அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அல் ராய்மி தலைமையின்கீழ் அல்கொய்தாவின் அராபிய வளைகுடா பிரிவு பயங்கரவாதிகள் யேமனில் அப்பாவி மக்களுக்கு எதிராக தீவிர வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலில் ராய்மி கொல்லப்பட்டிருப்பது, அல்கொய்தா அமைப்புக்கு பெரும் பின்னடைவு என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த அறிவிப்பில் ராய்மி, எங்கு வைத்து, எப்படி கொல்லப்பட்டார் என்ற விவரத்தை டிரம்ப் வெளியிடவில்லை.