பாகிஸ்தான் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாலிபன் தலைவனும் அதன் செய்தித் தொடர்பாளருமான எஹசானுல்லா எஹசான்( Ehsanullah Ehsan) சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி தப்பி விட்டதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல் பரவி வருகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வீட்டில் அந்த கொடிய தீவிரவாதி சிறை வைக்கப்பட்டிருந்தான். மலாலா யூசுப்பை கொல்ல முயன்ற வழக்கு , பெஷாவரில் 150 பள்ளிக்குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எஹசான் மீது உள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அவனை கைது செய்து அழைத்து வந்தது. இந்திய உளவுத்துறையான ரா தனக்கு நிதியுதவி செய்ததாகவும் அவன் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது.