காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்பதில் சவூதி அரேபியா அரசு தயக்கம் காட்டி வருகிறது. OIC, CFM எனப்படும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற இம்ரான் கானின் கோரிக்கைக்கு 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புகள் செவிசாய்க்கவில்லை.
இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மலேசியாவிலும் அவருக்கு போதிய அளவுக்கு ஆதரவு கிடைக்காததால் ஏமாற்றம் அதிகரித்துள்ளது.