மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.