இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் பாதுகாவலர் விமானத்தில் துப்பாக்கியை மறந்து வைத்தது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது துப்பாக்கியுடன் பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அது பற்றி விசாரித்தபோது, துப்பாக்கியும் பாஸ்போர்ட்டும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் பாதுகாவலருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
பின்னர் தீவிர விசாரணைக்குப் பின்னர் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.