நியூசிலாந்தின் சவுத் ஐலேண்ட் (South island ) பகுதியில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான சவுத் ஐலேண்ட் பகுதியின் பல இடங்களில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
இதனால் அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளும், அங்கு வசிக்கும் மக்களும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆற்றின் கரைகளில் உடைப்பை மணல் மூட்டையை அடுக்கி சரி செய்யும் பணி நடைபெறுகிறது.