தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது.
ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.