கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவன குழுவின் அங்கமாக, அமெரிக்க வல்லுநர்களையும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
அங்கு தொழில், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. சீனா தொடர்பாக தேவையற்ற பயணக் கட்டுப்பாடுகளை முதலில் விதித்தது, சீனாவில் உள்ள தங்கள் நாட்டவரை முதன் முதலில் மீட்டுச் சென்றது ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா தேவையற்ற அச்சத்தை உருவாக்கி பரப்புவதாக சீன அரசு குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், கொரானா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யவும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும் உலக சுகாதார நிறுவனத்தின் குழு சீனா செல்கிறது. இந்த குழுவில் அமெரிக்க வல்லுநர்கள் இடம்பெறுவதாகவும், இதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.