கொரோனா வைரஸ் பாதிப்பு பீதியால், முடங்கிப் போயுள்ள ஊகான் நகர மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை, கட்டுப்பாட்டுடன் விநியோகிக்கும் பணியில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊகான் நகரம், கடந்த ஜனவரி மாத பின்னிறுதியில், இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால், ஊகானில் வசிக்கும் மக்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் தட்டுப்பாட்டினால் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊகான் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணியில், சீன ராணுவத்தினர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். 200 டன் எடையுள்ள அத்தியாவசிய பொருட்களை, 130 லாரிகளில் எடுத்து வந்து, சீன ராணுவத்தினர், ஊகான் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.