ரங்கூன் மல்லி எனப்படும் சைனீஸ் ஹனிசக்கிள் (Chinese Honeysuckle) தாவரத்தின் தண்டும் இலைகளும் கொரோனாவைரசை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தவை என்று ஊகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டும் (Vuhan Virology Institute) Shanghai Institute of Materia Medica -ம் அறிவித்ததை அடுத்து அந்த தாவர சத்து அடங்கிய மருந்தை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ளனர்.
ஆனால், இந்த மருந்துக்கு கொரோனாவை தடுக்கவோ, குணமாக்கவோ சக்தி இல்லை என்று சீனாவின் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி (Peoples Daily) எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.