சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. குயிங்பைஜியாங்((Qingbaijiang)) மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 21 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
10 வினாடிகளுக்கு மேல் நீடித்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதுவரை உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் 150 மீட்புப் படையினரும் 34 வாகனங்களும் அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.