சீனாவின் வூகான் நகரில் கொரனோ வைரஸ் பரவியதையடுத்து அந்த நகரில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
கிட்டதட்ட ஒரு இரும்புக் கோட்டையாக அந்த நகரம் மாற்றப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் சராசரியாக 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கக்கூடிய பாதகமான சூழ்நிலையில் சீனா தத்தளிக்கும் நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீனாவின் இன்னொரு நகரமும் இதே போன்ற நிலையை எட்டியுள்ளது.
கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய நகரமான வென்சுவ் (Wenzhou) நகர மக்கள் வெளியேறும் சாலைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.