முற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் ஈக்குவடார் அருகே மீட்கப்பட்டுள்ளது.
கலபகோஸ் (Galapagos) தீவுகளில் ஒன்றான இசபெலாவில் (Isabela) உள்ள எரிமலையில் ஆய்வு பணிக்காக சென்ற விஞ்ஞானிகள் குழு, புளோரினா (Floreana) தீவில் வசிக்கக்கூடிய 29 ஆமைகளையும் பிந்தா தீவைச (Pinta) சேர்ந்த ஒரு பெண் ஆமையும் கண்டுபிடித்தனர்.
அவற்றை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு ஈக்குவடார் உயிரியல் பூங்காவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். பிந்தா தீவு இனத்தைச் சேர்ந்த கடைசி ஆமை 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்பட்டு வந்த நிலையில், அதன் நேரடி வம்சாவளியைச் சேர்ந்த இளம் ஆமை மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.