பிரேசிலில் லூநார் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சீனாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் கலை கட்டின.
சா பாலோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, கலைஞர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற டிராகன் நடனத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான முகமூடிகளை அணிந்து கொண்டு கலைஞர்கள் நடனமாடினர். சீன கொடியை கையில் ஏந்தியவாறு சாலையில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.