விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்து வருவதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாண தெற்கு பகுதி, கைபர் பக்துன்ஹவா மாகாணம் ஆகியவற்றில் 9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலத்துக்கு பரவியுள்ள வெட்டுக் கிளிகளால் பயிர்கள், மரங்கள் அழிவை சந்தித்துள்ளன.
இதையடுத்து பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அப்போது வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தேசிய அளவில் அவசரநிலை பிரகடனம் வெளியிட முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தவும், பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும் இம்ரான் கான் உத்தரவிட்டார்.